உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீனா விடுத்த சவால்

மீனா விடுத்த சவால்

சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் மரக்கன்றுகள் நடும் கிரீன் இந்தியா சாவலை முன்னெடுத்து வருவது தெரிந்ததே. அந்த வகையில், தெலுங்கானா எம்.பி சந்தோஷ்குமார் என்பவர் தற்போது கிரீன் இந்தியா சவாலை முன்னெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ்-4 சீசன் போட்டியாளர் தேவி நாகவல்லி என்பவர் நடிகை மீனாவிற்கு கிரீன் இந்தியா சவால் விடுத்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மீனா, சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதால் பசுமையை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இது இயற்கைக்கும், மண்ணிற்கும் நான் செய்யும் நன்றிக்கடன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சவாலை தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், நடிகைகள் மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர சொல்லி சவால் விடுத்துள்ளார் மீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !