ஜாக்குலினின் க்ரஷ் யார் தெரியுமா?
ADDED : 1719 days ago
சின்னத்திரை தொகுப்பாளினியாக வாழ்க்கை தொடங்கியவர் நடிகை ஜாக்குலின். தனது அப்பாவித்தனமான மற்றும் வேடிக்கையான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையான நடித்தவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு சிறிய ரோலில் வந்து போனார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ ஊராட்சிமன்றத் தலைவர் மெகா சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜாக்குலின் சமூகவலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது உங்கள் சிறுவயது க்ரஷ் (விருப்பமானவர்) யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு எப்போதுமே தனக்கு தனுஷ் மீது தான் க்ரஷ் என ஜாக்குலின் பதிலளித்துள்ளார்.