மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1690 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1690 days ago
காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வில் உள்ள கமல் இணையதளம் வாயிலாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளுடனும் பேச உள்ளார். இதையடுத்து கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ள கமல் அடுத்தகட்ட பிரசாரத்திற்கான திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சை துவக்க உள்ளார்.
1690 days ago
1690 days ago