உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி

டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி

சமூக வலைத்தளங்களில் புதிய திரைப்படங்களை அதிகமாக விளம்பரப்படுத்த பல்வேறு புதிய அறிமுகங்களை படக்குழுவினர் செய்வது வழக்கம். அதில் ஒன்றுதான் படங்களுக்கான சிறப்பு 'எமோஜி'க்கள்.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் 'மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர்' ஆகிய படங்களுக்காக டுவிட்டரில் எமோஜிக்களை வெளியிட்டார்கள். இதுவரையில் நடிகர்களுக்காக மட்டுமே எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல் முறையாக ஒரு நடிகைக்கும் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. சமந்தா நடித்துள்ள 'தி பேமிலி மேன் 2' வெப் தொடருக்காக அந்த எமோஜியை வெளியிட்டுள்ளார்கள். அடுத்த மாதம் வெளியாக உள்ள இத் தொடருக்காக தன்னுடைய எமோஜி வெளியாகி உள்ளது குறித்து சமந்தா மகிழ்ச்சியடைந்துள்ளார்.

“என்னுடைய முதல் எமோஜி, எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு பிரியங்கா சோப்ரா நடித்த 'த ஸ்கை இஸ் பின்க்' படத்திற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நடிகைகளைப் பொறுத்தவரையில் சமந்தா தான் எமோஜியை முதலில் பெற்ற முதல் நடிகை என்ற பெருமையைப் பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !