துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ்
ADDED : 1778 days ago
மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்க்காரு வாரிபாட்டா என்ற படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜனவரி25ஆம் தேதி முதல் துபாயில் தொடங்கயிருக்கிறது. இந்த படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா இயக்குகிறார்.
இந்த படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடைபெற இருந்தது. ஆனால் விசா, கொரோனா உள்ளிட்ட பிரச்சினை காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டிருக்கிறது. குட்லக் சகி, மிஸ் இந்தியா, பென்குயின் மற்றும் ரங் தே படங்களுக்காக வெயிட் குறைத்திருந்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக சற்று வெயிட் போட்டுள்ளார்.
மேலும், இப்படத்தில் நடிப்பதற்காக துபாய்க்கு தான் விமானத்தில் செல்லும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.