யோகிபாபுவின் பொம்மை நாயகி படப்பிடிப்பு தொடங்கியது
ADDED : 1824 days ago
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படங்களை தொடர்ந்து ரைட்டர் படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. யோகிபாபுடன் இணைந்து சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.