தீபாவளிக்கு 'அண்ணாத்த' வருகிறார்
ADDED : 1715 days ago
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு பின் சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. அங்கு நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நின்று போனது. தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். அதை தெரிவிக்கும் விதமாக இப்படம் நவ., 4ல் தீபாவளிக்கு ரிலீஸாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இனி அரசியல் இல்லை என ரஜினி முடிவு எடுத்துவிட்டதால் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.