மகளுடன் சைக்கிள் பயணம் செய்த அரவிந்த்சாமி!
ADDED : 1761 days ago
ஹீரோ-வில்லன் என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள தலைவி படத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வேடத்தில் நடித்துள்ளார். அவரது எம்ஜிஆர் கெட்டப் போட்டோக்கள் வெளியானதில் இருந்தே அச்சு அசலாக எம்ஜிஆரை பார்த்த மாதிரியே உள்ளது என்று அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
அரவிந்த்சாமிக்கு அதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தனது மகள் அதிராவுடன் சைக்கிளில் பயணிக்கும் ஒரு போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அரவிந்த்சாமி.