தரம் தாழ்ந்த விமர்சனம் : ஆரி வேதனை
பிக்பாஸ் போட்டியாளர்களை தரம் தாழ்ந்த விமர்சனங்கள் செய்வது வேதனை அளிப்பதாக பிக்பாஸ் சீசன்-4 வின்னரான நடிகர் ஆரி. அதுகுறித்து ஆரி ஒரு பேட்டியில் கூறுகையில், ''தரம் தாழ்ந்த விமர்சனங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்தபோது இந்த விமர்சனங்களை அறிந்து வேதனை அறிந்தேன். என்னுடைய சக போட்டியாளர்களுடன் எனக்கு போட்டி இருந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் இல்லாமல் நானில்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அதனால் சமூகவலைதளங்களில் முகம் தெரியாத நபர்கள் கண்டபடி விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதுவும் என்னுடைய பெயரில் இதுபோன்ற தவறான விமர்சனங்கள் வந்ததை அறிந்து மிகப்பெரிய வேதனை அடைந்தேன். அதோடு, விமர்சனம் என்பது எனது பெயரில் இருந்தாலும், இன்னொருவர் பெயரில் இருந்தாலும் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.