மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ADDED : 1716 days ago
இந்தியன்-2, பத்துதல உள்பட அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அதோடு கமர்சியல் கதாநாயகியாகவும் அவர் தற்போது உருவெடுத்திருப்பதை அடுத்து கமர்சியல் படம் இயக்கும் டைரக்டர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது.
அந்தவகையில், தனது மைத்துனரான அருண்விஜய்யை வைத்து அருவா என்ற படத்தை இயக்கும் ஹரி, அந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கு முன்பு கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படத்தில் அருண்விஜய்யுடன் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், மீண்டும் இந்த படத்தில் அவருடன் இணைகிறார்.