ரசிகரின் திருமணத்தில் பங்கேற்ற சூர்யா
ADDED : 1720 days ago
தமிழ் சினிமா நடிகர்களில் விஜய், அஜித்தைப் போலவே சூர்யாவுக்கும் ஒரு பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. அந்தவகையில் ரசிகர்களை அடிக்கடி சந்திக்கும் அவர், அவர்களின் இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தனது ரசிகர் ஹரி என்பவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் சூர்யா. அந்த புகைப்படங்களை சூர்யாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, வைரலாக்கினர்.