சிம்புவுடன் மோதும் பிரபல இயக்குனர்
ADDED : 1712 days ago
ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்து தல படங்களில் நடிக்கிறார் சிம்பு. இதில், பத்து தல படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், பத்து தல படத்தில் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் சினிமா கேரியரில் முக்கியமான படமான விண்ணைத்தாண்டி வருவாயா எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்தவர் கவுதம் மேனன். தொடர்ந்து இவர்கள் கூட்டணி அச்சம் என்பது மடமையடா படத்திலும் இணைந்தனர்.