இலியானாவின் டாப் ஆங்கிள் செல்பி : குவியும் லைக்ஸ்
ADDED : 1712 days ago
தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த பிறகு ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் பெருத்துப்போனார். இதனால் சில ஆண்டுகள் போதிய பட வாய்ப்பின்றி இருந்தார். பிறகு தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள தொடங்கி உடல் எடையை குறைத்தார். தற்போது முன்பு போல் ஸ்லிம்மாகி உள்ளார். சில படங்களிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் உடற்பயிற்சி முடித்த கையோடு டாப் ஆங்கிளில் ஒரு செல்பி எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் உடன் ''நான் பிட்டாக இருக்க நினைக்கிறேன், ஆனால் எனது அம்மா எனக்காக போர்ச்சுகீசிய பிரெட் தயார் செய்து கொடுக்கிறார்'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை சுமார் 5.70 லட்சத்திற்கும் அதிகமானபேர் லைக்ஸ் செய்துள்ளனர்.