குரங்குகளுடன் விளையாடிய நிக்கி கல்ராணி
ADDED : 1709 days ago
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், அதிலிருந்து மீண்டு, தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் நிக்கி கல்ராணி, சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் குரங்குகளுடன் விளையாடி அவற்றுக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பற்றி நிக்கி கல்ராணி. கூறும்போது, “நான் கொடுக்கும் பிஸ்கட்டுகளை வாங்குவதற்காக இங்கும் அங்கும் நடக்கும் சில வேடிக்கையான உரையாடல்கள்” என குறிப்பிட்டுள்ளார்.