ஜனவரி 31ல் கர்ணன் பர்ஸ்ட் லுக்
ADDED : 1711 days ago
தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கர்ணன். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா, லால், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் பர்ஸ்ட் லும் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் சமூகவலைதளப்பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.