கவுதம் மேனன் படம் : மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் நயன்தாரா?
ADDED : 1818 days ago
வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதையடுத்து 3வது முறையாக சிம்புவும், கௌதம் வாசுதேவ் மேனனும் இணைகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவர் இடையே ஏற்கனவே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதால் இப்படத்தில் இருவரையும் மீண்டும் ஜோடியாக்க கவுதம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.