அருண் விஜய்யுடன் மீண்டும் இணையும் யோகிபாபு
ADDED : 1706 days ago
என்னதான் உறவினர்கள் என்றாலும் நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் ஹரியும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான காலம் இப்போது தான் கனிந்து வந்துள்ளது. அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே தடம் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருந்தார். அதேசமயம் இயக்குனர் ஹரியின் டைரக்சனில் முதன்முறையாக யோகிபாபு நடிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.