உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு பேசும் மம்முட்டியின் 18ஆம் படி

தெலுங்கு பேசும் மம்முட்டியின் 18ஆம் படி

மம்முட்டி நடிப்பில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் 18ஆம் படி. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த இந்தப்படத்தில் மம்முட்டி சற்றே நீட்டிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில், வித்தியாசமான போனிடைல் ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் நடித்திருந்தார். மேலும் பிரித்விராஜ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட சில நடிகர்களு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். இந்தநிலையில் இந்தப்படம் 'கேங்ஸ் ஆப் 18' பெயரில் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. மலையாள சினிமாவின் நடிகரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !