மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரியங்கா மோகன்!
ADDED : 1753 days ago
தெலுங்கில் நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகன். அதையடுத்து தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் நடித்து வந்தபோது அவரது பர்பாமென்ஸ் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்ததால், சூர்யாவின் 40வது படத்திற்கும் பிரியங்கா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிபி சக்ரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக, தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே மூன்றாவது படத்தில் கமிட்டாகிவிட்டார் பிரியங்கா மோகன்.