உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் ராசாவின் மனசிலே 2 - ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்

என் ராசாவின் மனசிலே 2 - ராஜ்கிரண் மகன் இயக்குகிறார்

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என் ராசாவின் மனசிலே. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார்.

இது குறித்து ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி, இறை அருளால் இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் 25வது பிறந்த நாள்... என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்... என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !