தியேட்டரில் 'ஜகமே தந்திரம்' - தனுஷின் நம்பிக்கை
ADDED : 1705 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் வெளியாக வேண்டிய படத்தை இத்தனை நாட்களாக தியேட்டர் வெளியீடு என காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது ஓடிடியில் வெளியிட வேண்டிய காரணம் என்ன என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில், ''தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போன்று நானும், ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.