ஹரி - அருண் விஜய் படத்தில் புகழ்
ADDED : 1751 days ago
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போய் வெற்றிக்கொடி நாட்டிய காமெடி நடிகர்கள் ஏராளம். தற்போது அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் புகழ். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'அருண்விஜய் 33' எனக் குறிப்பிடப்படும் அப்படத்தில் ஏற்கனவே பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானிசங்கர், ராதிகா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது புகழ் இந்த படத்தில் நடிக்க இருப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.