டான்-ல் இணைந்த நால்வர்
ADDED : 1711 days ago
அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். கல்லூரியை பின்னணி கொண்டு காமெடியாக உருவாகும் இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நாயகியாக சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் மீண்டும் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது அவர் நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.