உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவசாயம் போராட்டம் குறித்த கருத்து - டாப்சி பதிலடி

விவசாயம் போராட்டம் குறித்த கருத்து - டாப்சி பதிலடி

கடந்த 70 நாட்களாக புதுடில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக மாறியது. முக்கியமாக இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர்.

தொடர்ந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, விவசாயிகள் -போலீஸ் மோதல், டில்லியில் இன்டர்நெட்டை கட் செய்தது போன்ற செய்திகளை முன்வைத்து, நாம் ஏன் இதைப்பற்றி பேசுவதில்லை? என்று டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்து அவரது டுவீட்டை ஆதரித்து வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்டவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்சய்குமார், நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டனர். இப்போது நடிகை டாப்சியும் தனது எதிர்ப்பு பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவீட்டில், ''ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையைத் தூண்டினால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதநம்பிக்கையை குலைக்குமானால், உங்கள் மதிப்பினை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பிரச்சாரர்களாக மாறக்கூடாது'' என்று பதிவிட்டுள்ளார் டாப்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !