உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்., 14ல் பெப்சிக்கு தேர்தல் : மூன்றாவது முறையாக ஆர்.கே.செல்வமணி போட்டி

பிப்., 14ல் பெப்சிக்கு தேர்தல் : மூன்றாவது முறையாக ஆர்.கே.செல்வமணி போட்டி

பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவராக இரண்டாவது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பதவி வகித்து வருகிறார். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2021-23ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் பிப்.,14ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகிறார்.

இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய செல்வமணி, ''பிப்.,14ல் பெப்சிக்கு தேர்தல் நடக்கும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்.,7ல் வெளியாகும். தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் என 13 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும். மேலும் கொரோனா காலத்தில் பெப்சிக்கு நிதியாக ரூ.3.93 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் பெப்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்சொன்ன தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன் அம்மா படப்படிப்பு தளம் அமைக்க முதல்வர் பழனிசாமி அறிவித்த ரூ.5 கோடி நிதியில் ஏற்கனவே இரு கட்டமாக ரூ.1.5 கோடி நிதி பெறப்பட்டது. இப்போது மூன்றாவது தவணையாக இன்று(பிப்., 4) ரூ.3.5 கோடி நிதியை முதல்வர் வழங்கி உள்ளார். அதற்காக அவருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கும் நன்றி. வருகிற பிப்., 24ல் அம்மா படப்பிடிப்பு தளம் துவங்கப்படுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் சம்மதம் சொல்லியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !