அருண் விஜய் படத்தில் இணைந்த அசுரன் நடிகை
ADDED : 1705 days ago
சூர்யா நடிப்பதாக சொல்லப்பட்ட அருவா படத்தின் கதையை தற்போது தனது மச்சான் அருண்விஜய்யை வைத்து இயக்குகிறார் ஹரி. இது அருண் விஜய்யின் 33ஆவது படம் ஆகும். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா, குக் வித் கோமாளி புகழ் என பலர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது அம்மு அபிராமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் சின்ன வயது தனுசுக்கு ஜோடியாக இவர் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.