உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விவாகரத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் : ஸ்வேதா பாசு

விவாகரத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் : ஸ்வேதா பாசு

ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, தமிழில் ரா ரா, சந்தமாமா போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைதாகி அந்த மன அழுத்தத்தால் அதிலிருந்து மீண்டு வந்தார். கடந்த 2018ம் ஆண்டில் ரோகித் மெட்டல் என்ற ஹிந்திப்பட இயக்குனரை திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா பாசு, கருத்து வேறுபாடு காரணமாக எட்டே மாதங்களில் அவரை பிரிந்தார்.

தற்போது படங்களிலும், சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸலும் நடிக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.எனது திருமண வாழ்க்கை எட்டே மாதத்தில் முடிவுக்கு வந்து விட்டது. விவாகரத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது என்றார் ஸ்வேதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !