உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் ஹீரோயின் ஆனார் டிக் டாக் கேப்ரில்லா

சீரியல் ஹீரோயின் ஆனார் டிக் டாக் கேப்ரில்லா

தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மூலம் புகழ்பெற்ற பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கேப்ரில்லா. முதன் முதலாக விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து புகழ்பெற்றார். தற்போது செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சுந்தரி என்ற தொடரில் நாயகியாக நடிக்கிறார். அழகும், நிறமும் இல்லாமல் இருக்கும் கிராமத்து பெண்ணான சுந்தரி. தன் உழைப்பால் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறாள் என்பதுதான் சுந்தரியின் கதை சுருக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !