வைரலாகும் கீர்த்தி சுரேஷ் பாடும் வீடியோ
தமிழில் அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் நான்கு படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று நிதினுக்கு ஜோடியாக நடிக்கும் ராங்டே. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ராங்டே படத்திற்காக தேவி ஸ்ரீபிரசாத் இசையில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலை அவருடனேயே இணைந்து பாடியிருக்கிறார். அப்படி ஸ்டுடியோவில் கீர்த்தி சுரேஷ் பாடியபோது அதை வீடியோ எடுத்த அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இசையில் அதிக ஆர்வம் கொண்டவரான கீர்த்தி சுரேஷ், இதற்கு முன்பு தான் வயலின் வாசிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தவர், இப்போது பாடகியாகவும் உருவெடுத்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத்தின் இசைக்கூடாரத்தில் அவர் பாட பயிற்சி எடுக்கும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.