கேரள திரைப்பட விழாவுக்கு சேத்துமான் தேர்வு
ADDED : 1709 days ago
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது. தொடர்ந்து ரைட்டர் மற்றும் பொம்மை நாயகி படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் சேத்துமான் படத்தை தயாரித்து முடித்திருக்கிறார். இது எழுத்தளார் பெருமாள் முருகனின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை சொல்லும் படம். கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படம் தேர்வாகி உள்ளது. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.