சிம்புவின் மாநாடு - எஸ்.ஜே.சூர்யா புதிய தகவல்
ADDED : 1748 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வரும் படம் மாநாடு. அரசியல் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் அப்துல்காலிக் என்ற வேடத்தில் சிம்பு நடிக்க கல்யாணி பிரிதர்ஷன் நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் டைரக்டர்கள் பாரதிராஜா,எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தைப்பற்றி எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தான் மாநாடு படத்தில் வில்லனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, மாநாடு படத்தின் திரைக்கதை இந்திய சினிமாவில் இதுவரை வந்ததில்லை. அப்படியொரு புதுமையான கதை. அதனால், படம் முழுக்க பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.