உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்- 65 படத்திற்கு யார் நாயகி?

விஜய்- 65 படத்திற்கு யார் நாயகி?

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 65வது படத்தில் பூஜா ஹெக்டே, அருண்விஜய், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானபோதும் இன்னமும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக முதலில் செய்தி வெளியான நிலையில், அதையடுத்து ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது கியாரா அத்வானியின் பெயரும் அடிபடுகிறது. அதாவது பூஜா ஹெக்டே, ராஷ்மிகா, கியாரா அத்வானி இந்த மூன்று பேரில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !