தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டேன் : மாளவிகா மோகனன்
ADDED : 1701 days ago
பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், அடுத்தபடியாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43ஆவது படத்தில் நடிக்கிறார். கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரகனி, ஸ்மிருதி என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த ஜனவரி 8-ந்தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தனுசுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அதோடு உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.