இளம் தலைமுறைக்கான புரிதல் அச்சம் தவிர்த்திடு
ADDED : 1701 days ago
என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சேவா, தற்போது எழுதி, இயக்கும் படம் அச்சம் தவிர்த்திடு. ஸ்ரீபிரபு, ஹேமா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். சிவபாஸ்கரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். அருள்தேவ் இசையமைக்கிறார். ஸ்ரீவலம்புரி விநாயக மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குனர் கூறுகையில், இந்தப்படம் முழுக்க காதலை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். அசல் வாழ்க்கையை விட்டு கொஞ்சமும் விலகாமல் இந்தப்படத்தை எடுக்கிறேன். கதை ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் இந்த கதையில் இருக்கும். படப்பிடிப்புக்கு முன்பே, ஒரு முன்னோட்ட வீடியோவை படமாக்கியிருக்கிறோம். அடுத்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றார் ராம்சேவா.