கொரோனாவிலிருந்து மீண்டார் சூர்யா
ADDED : 1748 days ago
நடிகர் சூர்யா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ''வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, பாதுகாப்பும், கவனமும் அவசியம்'' என தெரிவித்து இருந்தார். அவர் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டினர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அவர் நலமாகி உள்ளார். இதுப்பற்றி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி டுவிட்டரில், ''கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். அனைவரின் பிரார்த்தனை, வாழ்த்துக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.