வலிமை படத்தில் இணைந்த மலையாள நடிகர்
ADDED : 1795 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜீத் நடிக்கும் படம் வலிமை. இந்தப்படம் வினோத்தின் சொந்த கதையில் உருவாகி வருகிறது.. இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் அப்டேட் குறித்து எதிர்பார்த்து நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் தற்போது வலிமை குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் இந்த படத்தில் மலையாள இளம் நடிகரான துருவன் என்பவர் நடித்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான குயின், பைனல்ஸ் ஆகிய படங்களில் நடித்த இவர், வலிமை படத்தில் போலீஸ்காரர் வேடத்தில் நடித்துள்ளாராம்.