காடு வளர்க்கும் ரம்யா பாண்டியன்
ADDED : 1704 days ago
நடிகர் அருண்பாண்டினின் சகோதரர் மகள் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜோக்கர் படத்தின் மூலம் பேசப்பட்டார்.
அதன்பிறகு ஆண்தேவதை படத்தில் நடிடித்தார். போதிய சினிமா வாய்ப்புகள் இல்லாமல இருந்த ரம்யா பாண்டியன் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பக்கம் கவனம் செலுத்தினார் குக்கு வித் கோமாளி, கலக்கபோவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.
தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சென்னை அம்பத்தூரில் உள்ள தனது இடத்தில் ரம்யா பாண்டியன் மைக்ரோ பாரஸ்ட் என்ற காடுகள் வளர்ப்பு திட்டத்தை துவக்கி உள்ளார். நேற்று முதல்கட்டமாக 140 மரக் கன்றுகளை நட்டு இதனை தொடங்கினார். இந்த திட்டத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.