உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேச்சுலர் அடல்ட் காமெடி படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

பேச்சுலர் அடல்ட் காமெடி படம் அல்ல: இயக்குனர் விளக்கம்

ஜி.பி.பிரகாஷ் நடித்துள்ள படம் பேச்சுலர். திவ்யபாரதி, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் நடித்துள்ளனர், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், டில்லி பாபு தயாரித்துள்ளார். சதீஷ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:



படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் பார்த்துவிட்டு இது அடல்ட் காமெடி படமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக அப்படி இல்லை. பேச்சுலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் படம். எந்த இடத்திலும் எல்லை மீறாமல் படமாக்கி உள்ளோம். பேச்சுலர் என்கிற நிலையில் இருந்து ஒரு முழுமையான மனிதன் என்கிற நிலைக்கு ஒருவன் மாறும்போது ஏற்படுகிற மன மாற்றத்தை பதிவு செய்திருக்கிற படம்.


கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் ஐடி கெம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம். குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !