தள்ளிப்போகாதே ரிலீசுக்கு ரெடி
ADDED : 1703 days ago
ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஆர்.கண்ணன் தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை , இவன் தந்திரன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பிஸ்கோத் படங்களை இயக்கினார்.
தற்போது தள்ளி போகாதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
கொரோனா கால இடையூறுகள் இருந்தாலும் படத்தை திட்டமிட்டபடி முடித்து விட்டோம். எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்த படம் இருக்கும். ரொமாண்டிக் காதல் படமாக இருந்தாலும் பேமிலி செண்டிமெண்ட் கலந்த உணர்வுபூர்வமான படமாக இருக்கும். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்க இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.