பிரம்மாஸ்த்ரா - நாகார்ஜுனா பகுதி நிறைவு
ADDED : 1739 days ago
ஹிந்தியில் தயாராகி வரும் படம் “பிரம்மாஸ்த்ரா”. அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மவுனி ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் தனது பகுதியை முடித்துவிட்டார் நாகார்ஜுனா. இதுப்பற்றி டுவிட்டரில், ''இந்த படத்தில் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அயன் முகர்ஜி உருவாக்கி வரும் இந்தப்படத்தை காண காத்திருக்க முடியவில்லை. இந்தியாவின் பெரிய படம்'' என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.