25 மில்லியன் பார்வைகளை கடந்த யுவன் - ராஷ்மிகா ஆல்பம்
ADDED : 1697 days ago
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு இசை அமைப்பதுடன் அவ்வப்போது தனி இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் என்ற இசை ஆல்பத்தில் இணைந்துள்ளார் .
இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ராஷ்மிகா மந்தனாவும் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் யுவன் சங்கர் ராஜாவும் நடனம் ஆடி உள்ளார்.
இப்பாடல் யு டியூப் தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தனது யூ1 இணையதளம் மூலம் பல இசை ஆல்பங்களை தொடர்ந்து வெளியிட யுவன் முடிவு செய்துள்ளார்.