விக்னேஷ்சிவன் உதவியாளரை இயக்குனராக்கிய நயன்தாரா
நடிகை நயன்தாரா, அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஒரு புறம் ராக்கி மற்றும் கூழாங்கல் போன்ற தரமான சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இன்னொரு பக்கம் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான கமர்ஷியல் படங்களை தயாரித்தும் வருகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக இருந்த வினாயக் என்பரை இயக்குனராக்கி இருக்கிறார் நயன்தாரா. வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார் வினாயக். இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்தி, காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளது.
ஆரம்பகட்ட பணிகள் தற்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.