சிவகார்த்திகேயனின் 36வது பிறந்தநாள்- அயலான் முதல் பாடல் வெளியானது!
ADDED : 1693 days ago
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல்பிரீத் சிங், இஷாகோபிகர், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் சிவகார்த்திகேயனின் 36ஆவது பிறந்த நாளான இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.
இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் வெளியாக இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி காமன் டிபி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏராளமானோர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.