விக்னேஷ் சிவன் நன்றி
ADDED : 1804 days ago
நானும் ரவுடிதான் படத்தை அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கூட்டணியில் விக்னேஷ்சிவன் இயக்கி வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அதோடு காதலர் தினத்தில் இப்படத்தின் முதல் பாடலையும் வெளியிட்டனர். ரெண்டு காதல் என்ற அந்த பாடல் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இப்பாடலில், ''அர்த்தங்கள் தேடி போகாதே, அழகு அழிந்து போகும்...'' என்ற வரி தான் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி'' என டுவிட்டரில் பதிவிட்டு ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.