டி43ல் மாஸ்டர் மகேந்திரன்
ADDED : 1691 days ago
துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். டி43 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். கடந்த மாதம் முறைப்படி பூஜையைத் தொடங்கிய படக்குழுவினர் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய பாடல் காட்சியை படமாக்கினர்.
தற்போது இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக, விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.