உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோயில் கட்டும் ரசிகர்களுக்கு நிதி அகர்வால் வைத்த கோரிக்கை

கோயில் கட்டும் ரசிகர்களுக்கு நிதி அகர்வால் வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிலர் கோயில் கட்டினார்கள். இந்நிலையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்து கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்ட நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயில், ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவிடமாகவும், படிப்பளிக்கும் கூடமாகவும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன், என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !