36 வயதினிலே..! - மகிழ்ச்சியில் திளைத்த டிடி!
ADDED : 1692 days ago
டார்லிங் ஆப் டெலிவிஷன் என வர்ணிக்கப்படும் அளவிற்கு சின்னத்திரை தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. நேற்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் பல பிரபலங்களும் போன் வாயிலாகவும், நேரிலும், சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள டிடி, 'இத்துனை ஆண்டுகளாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தன்னை நேசிப்பது பக்க பலமாக இருப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது' எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒரு சில படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள டிடி, தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.