உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கருக்கு 'செக்' வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்

ஷங்கருக்கு 'செக்' வைத்த தெலுங்கு தயாரிப்பாளர்

ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க தற்போது உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை முதலில் தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு தான் தயாரிப்பதாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அது பற்றி அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அப்படத்திலிருந்து பின் வாங்கினார் தயாரிப்பாளர் தில் ராஜு. அதன்பின்தான் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்தது-

அந்த தில் ராஜுவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்க, ராம் சரண் நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தார்கள். படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜு போட்ட ஒப்பந்தம் தான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஷங்கரின் படங்கள் பொதுவாக பிரம்மாண்டமாகவும், பெரிய பட்ஜெட்டிலும் தான் தயாராகும். அதைப் போலவே இந்தப் படத்திற்கும் பெரிய பட்ஜெட்தான் கொடுத்தாராம். ஆனால், குறிப்பிட்ட அந்த பட்ஜெட்டிற்கு மேற்கொண்டு ஒரு பைசா கூட தரமாட்டேன் என தில் ராஜு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு ஷங்கருக்கு 'செக்' வைத்துவிட்டாராம்.

இப்படியே எல்லா தயாரிப்பாளர்களும் ஒப்பந்தம் போட்டால் அது திரையுலகத்தை வாழ வைக்கும் என தெலுங்கில் கிசுகிசுக்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !