தமிழில் வெளிவருகிறது தி மார்க்ஸ்மேன்
மில்லியன் டாலர் பேபி, பிளட் ஒர்க், அமெரிக்கன் ஸ்னிப்பர் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய லாபர்ட் லோர்னஸ் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் தி மார்க்ஸ்மேன். லியம் நீசன், கேத்ரியன் வினிக் தெரசா ருயிஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சின் கேலரி இசை அமைத்திருக்கிறார், மார்க் பேட்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஓய்வு பெற்ற கடற்படை வீரரான ஹான்சான் அரிசோன் மெக்சிகோ கடற்கரையில் தனது ஓய்பு காலத்தை கழிக்கிறார். அவர் வசிக்கும் ஊரில் நடக்கும் ஒரு சம்பவம் அவரது அமைதியான வாழ்க்கையை குலைக்கிறது. அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு எப்படி மீண்டும் அமைதி வாழ்க்கைக்கு திரும்புகிறார் என்பது தான் கதை.
கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியான இந்தப்படம் வசூலை குவித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வருகிற 26ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவருகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு வெளியாகும் ஹாலிவுட் படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.