ராயர் பரம்பரை: கிருஷ்ணா ஜோடியாக 2 ஹீரோயின்
ADDED : 1692 days ago
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு தயாரிக்கும் படம் ராயர் பரம்பரை. இதில் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் மரடோனா, டூ ஸ்டேட்ஸ் படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் தமிழுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுசுலா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். இது ரொமாண்டிக் காமெடி படம். பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. புதுமுகம் ராம்நாத் இயக்கி உள்ளார், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது.